பொம்மலாட்ட வடிவில் Jacques Chirac..!!
9 ஐப்பசி 2019 புதன் 10:30 | பார்வைகள் : 21961
சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac, பிரெஞ்சு மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஜனாதிபதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தொடர்ச்சியாக அவர் பல ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்ததால் அவர் மீதான விமர்சனங்களுக்கும் குறைவில்லை.
ஜனாதிபதி Jacques Chirac பல்வேறு வடிவங்களில் பல கலை வடிவங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளார். அதில் மிக பிரபலமான ஒன்று தான் பொம்மலாட்டம்.

பிரெஞ்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Le Bébête Show நிகழ்ச்சியில் ஜனாதிபதி Jacques Chirac இனை ஜனாதிபதியாகவே காண்பித்திருப்பார்கள். (கார்டூன் வகை) மிக துடுக்குத்தனமான எளிதில் உணர்ச்சி வசக்கூடிய வகையில் அவரை சித்தரித்திருந்தார்கள்.
ஆனால் இது வெறுமனே கதை சொல்லி நிகழ்ச்சி என்பதால் அத்தனை சர்ச்சைக்குள்ளாகவில்லை.
Les Guignols எனும் ஒரு நிகழ்ச்சி தான் பெரும் சோதனையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சி ஒரு அரசியல் நையாண்டி நிகழ்ச்சி. இதுவும் பொம்மலாட்டம் வடிவில் அரசியல் பேசியது.
இதில் ஜனாதிபதி Jacques Chirac இனை ஊழல் அரசியல்வாதியாக தொடர்ச்சியாக சித்தரித்தார்கள்.
முதலில் அந்த கதாப்பாத்திரத்தை 'திறமையான பொய் சொல்லி' எனும் சூப்பர் ஹீரோ போன்று வடிவமைத்தார்கள். ஆனால் நிகழ்ச்சியின் அதீத வரவேற்பினால் அவரை வில்லனாக்கிவிட்டார்கள். மிக நீண்டகாலம் ஓடிய இந்த தொலைக்காட்சி பொம்மலாட்ட வடிவில் ஜனாதிபதி Jacques Chirac இற்கு தூக்கத்தை கெடுத்தது.

























Bons Plans
Annuaire
Scan