கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!! (பகுதி 07)
24 புரட்டாசி 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18341
Abagnale வாழ்க்கை புத்தமாக எழுதப்பட்டது. எழுத்தாளர் Stan Redding உடன் இணைந்து Abagnale இந்த புத்தகத்தை எழுதினான்.
1980 ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியானது. 253 பக்கள் கொண்ட இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் விறுவிறுப்புத்தான்.
விற்பனையில் பெரும் சாதனை படைத்த இந்த புத்தகம் பிரெஞ்சில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சிலும் விற்பனையானது.
இந்த புத்தகம் பின்னர் அதே பேரில் திரைப்படமானது.
Catch Me If You Can
Catch Me If You Can (உன்னால் முடிந்தால் என்னை பிடி) எனும் இத்திரைப்படம் அமெரிக்காவின் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்கினால் இயக்கப்பட்டது.
லியானார்டோ டிகாப்ரியோ கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
$52 மில்லியன் அமெரிக்க டொலர்களில் தயாரான இத்திரைப்படம் $352 மில்லியன் டொலர்களை வசூலித்தது.
Abagnale வாழ்க்கையில் இருந்து பல மாற்றங்களை திரைப்படத்துக்காக ஸ்டீபன் ஸ்பில்பேர்க் செய்திருந்தார்.
ஒருவனின் வாழ்க்கை தவறான வழியில் சென்றதுடன் இந்த உலகத்துக்கு அது விழிப்புணர்வு பாடமாக அமைந்தும், புத்தமாகவும், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது.
(முற்றும்)