தோல்விகளால் விலகிய பாபர் அசாம்: புதிய கேப்டனை அறிவித்த பாகிஸ்தான்..!
28 ஐப்பசி 2024 திங்கள் 08:42 | பார்வைகள் : 587
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான் அணியின் தலைவராக செயல்பட்டு வந்த பாபர் அசாம் (Babar Azam) தனது பொறுப்பில் இருந்து விலகினார்.
தொடர் தோல்விகளால் அவர் மீது எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்தார்.
மேலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் சரியாக விளையாடாத நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடாமல் ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இவர் தலைமையிலான பாகிஸ்தான் அணி அடுத்து நடைபெற உள்ள அவுஸ்திரேலியா, ஜிம்பாப்பே அணிகளுக்கு எதிரான தொடர்களில் களமிறங்குகிறது.
32 வயதாகும் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) 102 டி20 போட்டிகளில் விளையாடி 3,313 ஓட்டங்களும், 74 ஒருநாள் போட்டிகளில் 2088 ஓட்டங்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.