Paristamil Navigation Paristamil advert login

கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!! (பகுதி 06)

கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!!  (பகுதி 06)

23 புரட்டாசி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 18582


அமெரிக்காவின் உளவுப்படையான FBI இல் இவன் முக்கிய பாடத்திட்டமானான். சிறைத்தண்டனைக்குப் பின் அவன் அமெரிக்காவின் காவல்துறையினருக்கு சில வழக்குகளில் உதவியிருந்தான். 
 
அதைத் தொடர்ந்து, அவனை FBI இழுத்துப்போட்டது. <<Abagnale & Associates>> எனும் ஒரு நிறுவனத்தை Tulsa, (Oklahoma) நகரில் ஆரம்பித்தான். 
அந்த நிறுவனத்தில் 'ஏமாறாமல் இருப்பது எப்படி?' என பல நிறுவனங்களுக்கு வகுப்பு எடுத்தான். (அட... உண்மைதாங்க..) 
 
FBI அகாடமியில் 40 வருடங்களுக்கும் மேலாக இவன் பணியாற்றியுள்ளான். FBI இல் கள பணியாற்றும் நபர்களுக்கு இவர் தீவிர பயிற்சியளித்தான். அந்த அளவுக்கு அவனிடம் அனுபவமும், திறமையும் இருந்தன. 
 
14,000 கல்வி நிறுவனங்களில் இவன் குறித்த கல்வித்திட்டம் உள்ளதாக அறியமுடிகிறது.
 
ஆனால் இதற்கெல்லாம் ஒருபடி மேலே அமெரிக்காவின் 'செனட்' சபைக்கு சிறப்பு கடமையாற்ற அழைக்கப்பட்டான். (நவம்பர் 2012ல்) முதிய செனட் உறுப்பினர்களிடம் ஏதேனும் குற்றச்செயல்கள் அல்லது மோசடி செயல்கள் உள்ளதா என கண்டறிய.. 
 
இப்படி அசாத்தியமான வாழ்க்கை வாழ்ந்த Abagnale இன் வாழ்க்கை புத்தகமானது.. பிந்நாளில் மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படமும் ஆனது.
 
-நாளை.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்