Paristamil Navigation Paristamil advert login

இலங்கையர்களை OTPஐ வெளித்தரப்பினரிடம் பகிர வேண்டாம் என வலியுறுத்தல்!

இலங்கையர்களை OTPஐ வெளித்தரப்பினரிடம் பகிர வேண்டாம் என வலியுறுத்தல்!

28 ஐப்பசி 2024 திங்கள் 09:28 | பார்வைகள் : 3147


வர்த்தக வங்கிகளினால் வழங்கப்படும் ஓ.டி.பி எனப்படும் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தும் கடவுச்சொல்லை எந்தவொரு வெளித்தரப்பினரிடமும் பகிர வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்தி வருகின்றது. 

தற்போது இணையவழி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி மோசடிகள் இடம்பெறுகின்றன. 
 
அத்துடன் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. 
 
இதன்காரணமாக ஓ.டி.பி எனப்படும் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தும் கடவுச்சொல்லை எந்தவொரு வெளித்தரப்பினருடனும் பகிர வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்