மெக்சிகோவில் பயங்கர விபத்து! 24 பேர் உயிரிழந்த சோகம்
28 ஐப்பசி 2024 திங்கள் 10:28 | பார்வைகள் : 1456
மெக்சிகோ நாட்டில் சுற்றுலா பயணி பேருந்து மற்றும் லொறி மோதிய பயங்கர விபத்தில் 24 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சுற்றுலா பேருந்து ஒன்று, நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு பயணித்தது.
குறித்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
ஜகாடெகாஸ் மாகாணத்தில் பாலம் ஒன்றின் மீது பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த சோளம் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றில் இருந்து பிரிந்த ட்ரெய்லருடன் பேருந்து மோதியது.
இதனால் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்திற்குள்ளானது. இதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் ஐந்து பேர் காயமடைந்ததாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு Zacatecasயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொதுச்செயலாளர் Rodrigo Reyes Muguerza விபத்து குறித்து கூறுகையில், "இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் நேசிப்பவரை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும், மக்களுக்கும் எங்கள் ஒற்றுமையையும், இரங்கலையும் தெரிவிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், விபத்து நடந்த பகுதிக்கு அதிகாரிகள் பாதுகாப்பு அளித்ததாகவும், நெடுஞ்சாலை மூடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
காயம் அடைந்தவர்களின் பெயர் விபரம் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.