கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!! (பகுதி 05)
22 புரட்டாசி 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 19061
1969 ஆம் ஆண்டு அவன் முதன் முதலாக Montpellier நகரில் வைத்து கைது செய்யப்பட்டான். அவன் கைது செய்யப்படும் போது அவன் மீது 12 நாடுகள் வழக்கு தொடுத்திருந்தன.
பிரான்சின் தென்மேற்கு பிராந்தியமான Perpignan நகரில் உள்ள சிறைச்சாலையில் அவனுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது.
சிறைக்குள் மின்சார வசதி இல்லை. மெத்தை இல்லை, தண்ணீரும் உணவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவு மாத்திரமே வழங்கப்பட்டது. ஆனால் சிறைத்தண்டனை இரண்டு வருடங்களில் இருந்து ஆறு மாதமாக குறைக்கப்பட்டது.
பின்னர் பிரான்சில் இருந்து ஸ்வீடன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்குள்ள குற்றங்கள் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு அங்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இப்போது அமெரிக்காவின் முறை...
ஸ்வீடனில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தபோது, பிரித்தானியாவுக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் தப்பிச் சென்றுவிட்டான். இதற்கான ஏற்பாடுகளை எப்போது எப்படிச் செய்தான் என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.
பின்னர் அவன் கனடாவின் மொன்றியல் நகர விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டுசெல்லப்பட்டான்.
அமெரிக்காவில் 12 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தான்.
சிறைத்தண்டனை காலம் நிறைவடைவதற்குள் ஜோர்ஜியா நாட்டில் மேற்கொண்ட குற்றங்களை விசாரிக்க அங்கு அனுப்பிவைக்கப்பட்டான். அங்கு அட்லாண்டா எனும் நகரில் உள்ள சிறையில் இருக்கும் போது அங்கிருந்து தப்பித்தான்.
பின்னர் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு வெளியேறிய அவனுக்கு ஒரு எதிர்பாராத வாய்ப்பு வந்தது.
அந்த வாய்ப்பு அமெரிக்க உளவுப்படையான FBI இல் பணிபுரிவது...!!
-நாளை.