கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!! (பகுதி 04)

21 புரட்டாசி 2019 சனி 10:30 | பார்வைகள் : 21533
Abagnale போலி விமானியாக விமானத்தில் தொடர்ச்சியாக பயணித்தான். ஒருதடவை விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, விமானத்தை சிலமணிநேரம் கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் படி அழைப்பு வந்ததாம்.
9,100 மீற்றர் உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அதாவது 30,000 அடி உயரம்.
Abagnale அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டான்.
விமானி இருக்கையில் அமர்ந்துகொண்டு தானியங்கி பொத்தானை அழுத்தி தானியங்கி முறையில் சிலமணிநேரம் விமானத்தை செலுத்தியுள்ளான்.
<<என்னுடைய உயிரையும் சேர்த்து மொத்தம் 140 உயிர்கள் விமானத்தில் இருந்தனர். நான் வாழ்நாளில் ஒரு பட்டம் கூட பறக்கவிட்டதில்லை>> என பின்நாளில் ஒருநாள் தெரிவித்திருந்தான்.
*****
இவன் அமெரிகாவில் உள்ள Brigham Young University பல்கலைக்கழகத்தில் சமூகவியல் ஆசிரியராக சில மாதங்கள் கல்வி கற்றுத்தந்திருந்தான். Frank Adams எனும் போலிப்பெயரில்.
*****
Abagnale பல மாதங்களாக ஒரு மருத்துவராக நடித்தான். டொக்டர். Frank Williams எனும் போலிப்பெயரில் Georgia மருத்துவமனையில் மருத்துவராக இணைந்துகொண்டான். (அத்தனையும் போலி ஆவணங்கள். பிரான்சில் இருந்து அச்சடித்து பெறப்பட்டவை.)
போலி மருத்துவராக இருந்த போது அவன் தங்கியிருந்த வீட்டில் வசித்த மற்றுமொரு நபர் இவனை அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் அதில் இருந்து எப்படியோ தப்பிக்கொண்டான்.
குழந்தை ஒன்றுக்கு மூச்சு பிரச்சனையுடன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது அவன் அங்கிருந்து வெளியேறினான். அன்றில் இருந்து மருத்துவ அடையாளத்தை கைவிட்டான்.
****
இறுதியாக அவன் 1969 ஆம் ஆண்டு பிரெஞ்சு காவல்துறையினரால் கைது செய்யப்படும் போது அவன் மீது 12 நாடுகள் வழக்கு தொடுத்திருந்தன.
-நாளை.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1