பிரான்ஸ் - மொராக்கோ : 10 பில்லியன் யூரோக்கள் ஒப்பந்தம்!
29 ஐப்பசி 2024 செவ்வாய் 07:14 | பார்வைகள் : 2521
மொராக்கோவுக்கு பயணமாகியுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு 10 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று ஒக்டோபர் 28 ஆம் திகதி, மொராக்கோ ஜனாதிபதி Mohammed VI இனைச் சந்தித்து உரையாடினார். பின்னர் இருவரும் பல்வேறு வியாபார உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர். பிரான்ஸ் மொத்தமாக 1- பில்லியன் யூரோக்களை அங்கு முதலிட்டுள்ளதாக ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார்.
மொராக்கோவின் Tangier-Marrakech நகரங்களுக்கிடையே அதிவேக தொடருந்து சேவை ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தண்டவாளம் அமைக்கும் பணியை Egis எனும் பிரெஞ்சு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிவேக தொடருந்து தயாரிப்பை மற்றுமொரு பிரெஞ்சு நிறுவனமான Alstom உடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.