வீசா முடிந்த மக்களுக்களுக்காக உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!
29 ஐப்பசி 2024 செவ்வாய் 08:41 | பார்வைகள் : 14371
லெபனானில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த, வீசா காலப்பகுதி நிறைவடைந்த மக்களுக்கு உள்துறை அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
லெபனானில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரான்சுக்கு கடந்த மாதங்களில் வருகை தந்துள்ளனர். அவர்களில் சிலரது வீசாக்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனானில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில், அவர்கள் அங்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில், வீசா முடிந்து ஆவணங்கள் அற்று இருப்பவர்கள் உள்துறை அமைச்சகத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
தற்போது பிரான்சில் 104,000 லெபனான் மக்கள் செல்லுபடியான வீசாவுடன் பிரான்சில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan