கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!! (பகுதி 03)
20 புரட்டாசி 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18425
இவன் வங்கிகளில் கொள்ளையடித்த தொகை அளவு கணக்கில்லாதது. இன்று வங்கிகளில் சட்டங்கள் இறுக்கிப்பிடிக்கவும், மிக நேர்த்தியான சட்டதிட்டங்கள் வகுக்கவும், பாதுகாப்பை இரட்டிப்பாக்கவும் இவன் ஒருவனே காரணம்.
போலி அடையாள அட்டையை தயாரித்து வங்கியில் போலி கணக்கு ஆரம்பித்தான். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு பேரில் கணக்கு ஆரம்பித்து வெவ்வேறு விதங்களில் பணத்தை சுருட்டினான்.
அமெரிக்க வங்கிகளுக்காக அவனது தாய் பிறந்த ஊரான Montrichard (Val-de-Cher) இல் போலி காசோலைகளை அச்சடித்தான். அதை வைத்து பல வங்கிகளை ஏமாற்றியுள்ளான்.
பல முன்னணி நிறுவங்களின் சம்பள காசோலை போன்று அச்சடித்து அதை வங்கியில் கொடுத்து பணம் பெற்றுக்கொண்டுள்ளான். (அறிந்த நிறுவனம் தானே பணத்தை செலுத்திவிடும் என நம்பியிருந்த வங்கிக்கு பெரும் நாமத்தை போட்டுவிட்டு சென்றிருந்தான்)
இப்படி பல நூதன கொள்ளைகளை அரங்கேற்றினான்.
இது தவிர மிக பிரபலமான மோசடி ஒன்றை இவன் நீண்டகாலமாக செய்திருந்தான். அது தெரியவந்தபோது மொத்த உலகமே அதிர்ச்சிக்குள்ளானது..
*****
Pan American World Airways எனும் அமெரிக்காவின் மிக பிரபலமான விமான சேவை நிறுவனத்தை நீண்டகாலமாக ஏமாற்றி உள்ளான்.
குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த விமானி என ஒரு அடையாள அட்டையை தயாரித்து அதைக்கொண்டு <<தாம் ஒரு உணவகத்தில் தனது சீருடையை தொலைத்துவிட்டதாக தெரிவித்து' புதிய சீருடையை பெற்றுக்கொண்டான். பின்னர் அதே அடையாள அட்டையை வைத்துக்கொண்டு குறித்த நிறுவனத்தின் விமானத்தில் 1,600,000 கிலோமீற்றர்கள் பயணித்துள்ளான்.
(நிறுவன ஊழியர்களின் மாத வருமானத்தில் இந்த பயண செலவை கழித்துக்கொள்வார்கள் என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை)
மொத்தமாக 26 நாடுகளுக்கு 250 தடவைகள் பயணித்துள்ளான்.
ஒருதடை விமானத்தில் பயணிக்கும் போது, விமானத்தை செலுத்தும் படி ஒரு கோரிக்கை வந்தது...
-நாளை.