Paristamil Navigation Paristamil advert login

முதல் சர்வதேச டெஸ்ட் சதம் அடித்த வீரர்

முதல் சர்வதேச டெஸ்ட் சதம் அடித்த வீரர்

29 ஐப்பசி 2024 செவ்வாய் 10:13 | பார்வைகள் : 3039


வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவின் டோனி டி ஸோர்ஸி முதல் சதம் விளாசினார்.

Chattogramயில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியுள்ளது.

அணித்தலைவர் எய்டன் மார்க்ரம் (Aiden Markram) 33 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டோனி டி ஸோர்ஸி மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் கூட்டணி அமைத்தனர்.

நங்கூரமாய் நின்று ஆடிய டோனி டி ஸோர்ஸி (Tony de Zorzi) தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.

8வது டெஸ்டில் விளையாடி வரும் அவர் 500 ஓட்டங்கள் குவித்துள்ளார்.   

வர்த்தக‌ விளம்பரங்கள்