6 மாதங்களிலேயே ராஜினாமா செய்த பாகிஸ்தான் பயிற்சியாளர்! வேகப்புயல் புதிதாக நியமனம்
29 ஐப்பசி 2024 செவ்வாய் 10:17 | பார்வைகள் : 654
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் பதவி விலகியதைத் தொடர்ந்து ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகள் செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பயிற்சியாளராக பதவியேற்ற 6 மாதங்களில் கேரி கிர்ஸ்டன் ராஜினாமா செய்துள்ளார்.
நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பியை (Jason Gillespie) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளராக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக PCB வெளியிட்டுள்ள பதிவில், "கேரி கிர்ஸ்டன் தனது ராஜினாமாவை சமர்ப்பித்ததை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள White-Ball சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு ஜேசன் கில்லெஸ்பி பயிற்சியளிப்பார்" என தெரிவித்துள்ளது.