Paristamil Navigation Paristamil advert login

கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!! (பகுதி 02)

கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!!  (பகுதி 02)

19 புரட்டாசி 2019 வியாழன் 10:29 | பார்வைகள் : 20255


அமெரிக்க விமான நிலைய வளாகத்தில் ஒரு தனியார் நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தில் விமான பயணச்சீட்டு விற்பனையும், மகிழுந்து வாடகைக்கு விடும் சேவைகளும் மேற்கொள்ளுவார்கள். 
 
அந்நிறுவனத்தினர் தங்களின் தின வருமானத்தை ஒரு ஜிப் வைத்த பை ஒன்றுக்குள் போட்டு, அதை விமான நிலைய வளாகத்தில் உள்ள பணப்பெட்டிக்குள் (ட்ராப் பொக்ஸ் - drop box) போடுவார்கள். 
 
இதை அவதானித்த Abagnale, இந்த பணத்தை கொள்ளையிட திட்டமிட்டான். 
 
பின்னர் அவன் ஒருநாள் காரியத்தில் இறங்கினான். 
 
குறித்த தனியார் நிறுவனத்தின் மெய் பாதுகாவலர் போன்று மாறுவேடம் அணிந்து அன்று மாலை விமான நிலைய வளாகத்துக்குள் வந்தான்.  அங்கிருந்த ட்ராப் பொக்ஸ் மீது, 'பணப்பெட்டி பழுதடைந்துள்ளது. பணத்தினை பணியில் இருக்கும் பாதுகாவலரிடம் கையளிக்கவும்' என எழுதப்பட்ட ஒரு துண்டை வைத்தான். 
 
சில நிமிடங்களில் நிறுவனத்தை மூடிவிட்டு பணம் போடுவதற்காக அங்கு வந்த ஊழியர்கள் இதனை வாசித்துவிட்டு, பாதுகாவலரிடம் (Abagnale இடம்) பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பினர்கள். 
 
பணத்தை பெற்றுக்கொண்ட Abagnale, அங்கிருந்து நைசாக நழுவிக்கொண்டான். 
 
அது ஒரு இலட்சம் டொலர்களுக்கும் மேல். 
 
இந்த உலகத்தை அவன் மிக 'சிம்பிளாக' கணக்கிட்டு வைத்திருந்துள்ளான். நான் யார வேண்டுமானாலும் ஏமாற்றுவேன் என எண்ணியிருந்தான். 
 
பின்னே.., எந்த வித இலத்திரனியல் செயற்பாடும் இல்லாத ஒரு பலகையிலான பெட்டி எப்படி பழுதடைய முடியும்..?? அதையும் நம்பி அந்த ஊழியர்கள் பாதுகாவலரிடம் பணத்தை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்களே..??!!
 
-நாளை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்