பரிஸ் ஏழாம் வட்டாரத்தில் கொள்ளை.. ஒரு மில்லியன் யூரோக்கள் மாயம்..!

29 ஐப்பசி 2024 செவ்வாய் 12:01 | பார்வைகள் : 6973
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள், €1 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள பணம், நகைகளைக் கொள்ளையிட்டுள்ளனர்.
நேற்று ஒக்டோபர் 28, திங்கட்கிழமை நண்பகல் boulevard Raspail பகுதியில் உள்ள ஆளில்லாத வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றனர். கொள்ளையிட்ட பொருட்களின் மொத்த மதிப்பு €1 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையிடம்பெற்ற வீடு, மெக்ஸிக்கோவைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றின் இயக்குனருக்கு சொந்தமானது எனவும், கொள்ளையர்கள் கண்காணிப்புக் கமராக்களை உடைத்துவிட்டு உள்நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025