Paristamil Navigation Paristamil advert login

ரொனால்டோவின் ஒற்றை தவறால் அல் நஸருக்கு மரண அடி! 

ரொனால்டோவின் ஒற்றை தவறால் அல் நஸருக்கு மரண அடி! 

30 ஐப்பசி 2024 புதன் 09:33 | பார்வைகள் : 3486


அல் தாவூன் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் தோல்வியுற்று கிங் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. 

சாம்பியன்ஸ் கிங் கோப்பை தொடர் போட்டியில் அல் நஸர் (Al Nassr) மற்றும் அல் தாவூன் (Al Taawoun) அணிகள் மோதின.

ரியாத்தில் நடந்த இந்த நாக்அவுட் போட்டியில் அல் தாவூன் வீரர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். எனினும் ரொனால்டோ கோல் அடிக்க போராடினார். 

45+2வது நிமிடத்தில் Freekickயில் அவர் அடித்த On goal ஷாட்டை, எதிரணி கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்.

இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 71வது அல் தாவூன் வீரர் Waleed Al-Ahmed, கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை எகிறி தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

அதன் பின்னர் அல் நஸர் அணிக்கு கூடுதல் நேரத்தில் (90+6) பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. 

எப்படியும் ரொனால்டோ கோல் முடித்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் செய்த கிக்கினால் பந்து கோல் போஸ்டிற்கு மேலே சென்றுவிட்டது.

மேலும் ரசிகர்களில் படம் பிடித்துக் கொண்டிருந்த சிறுவனை பந்து தாக்கியதில், அவரது செல்போன் பறந்து சென்று விழுந்தது. 

கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) செய்த தவறினால் அல் நஸர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றதுடன், சாம்பியன்ஸ் கிங் கோப்பை தொடரை விட்டும் வெளியேறியது. 

தோல்விக்கு பின் ரொனால்டோ வெளியிட்ட பதிவில், "ஒவ்வொரு சவாலும் வளர்வதற்கான ஒரு வாய்ப்புதான்" என கூறியுள்ளார்.    

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்