Val-de-Cher மாவட்டத்துக்கு பரிசளிக்கப்பட்ட கிராமம்..!!
17 புரட்டாசி 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18987
ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒவ்வொரு கதைகள் உண்டு. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் இடம் மாற்றப்பட்ட ஒரு கிராமத்தை பற்றி அறிந்துகொள்ளலாம்.
Val-de-Cher மாவட்டத்தின் எல்லையோர கிராம தான் Montrichard. மிக பிரபலமான சிறிய கிராம். 14.3 சதுர கிலோமீற்றர்கள் கொண்ட இந்த கிராமத்தில் தற்போதைய கணக்கின் பதி 4,000 க்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர்.
Val-de-Cher மாவட்டத்தில் இருப்பதாக சொன்னோம் இல்லையா..?? இங்குள்ள Cher நதியோரம் இந்த கிராமம் அமைந்துள்ளது.
கிராமம் என்றால் இதுபோல் அழகான கிராமம் ஒன்றை நீங்கள் காணவே முடியாது.
இக்கிராமத்தின் பிரதான வருமானம் திராட்சைத் தோட்டம். கிட்டத்தட்ட முழு கிராமுமே திராட்சைத் தோட்டமாகத்தான் தென்படும்.
தவிர மர பலகை உருவாக்கம், கால்நடைகள் மற்றும் தானியங்கள் போன்றனவும் இங்கு பிரதான வருமானமாக உள்ளது.
கிராம மக்கள் முழுவதுமே விவசாயிகள் கால்நடை பண்ணையாளர்கள் தான்.
சரி விஷயத்துக்கு வருவோம். Val-de-Cher மாவட்டத்துக்கு அருகே உள்ள மாவட்டம் Loir-et-Cher....
இந்த Montrichard கிராமம், மூன்று வருடங்கள் முன்பு வரை Loir-et-Cher மாவட்டத்துக்கு சொந்தமாக இருந்தது.
2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இக்கிராமத்தை Val-de-Cher மாவட்டத்துக்கு பரிசளித்துவிட்டார்கள். Montrichard கிராமம் தற்போது Val-de-Cher மாவட்டத்துக்குச் சொந்தமானது. ஆனாலும் கிராம மக்கள் இரண்டு மாவட்டங்களையுமே தங்கள் சொந்த நகரமாக பார்க்கின்றனர்.
இங்கு ஒரு அசாதாரண சம்பவம் இடம்பெற்றது. பின்னொரு நாளில் அச்சம்பவம் அமெரிக்க திரைப்படமும் ஆனது. அது நாளை...!!