Paristamil Navigation Paristamil advert login

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

30 ஐப்பசி 2024 புதன் 10:30 | பார்வைகள் : 3257


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்  இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 23 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, இவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்