Paristamil Navigation Paristamil advert login

அர்ஜென்டினாவில் அடுக்குமாடி ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்து -  ஒருவர் பலி 9 பேர் மாயம்

அர்ஜென்டினாவில் அடுக்குமாடி ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்து -  ஒருவர் பலி 9 பேர் மாயம்

30 ஐப்பசி 2024 புதன் 11:53 | பார்வைகள் : 619


அர்ஜென்டினா நாட்டில் ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்ததில், பக்கத்து கட்டிடத்தில் இருந்த 80 வயது முதியவர் ஒருவர் பலியானதுடன் 9 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் பகுதியில் இருந்து 370 கி.மீ. தொலைவில் வில்லா கெஸ்செல் என்ற இடத்தில் துப்ரோவ்னிக் ஹோட்டல் ஒன்று இருந்தது. இந்நிலையில் 10 அடுக்குமாடிகளை கொண்ட இந்த ஹோட்டல் நேற்று திடீரென இடிந்து விழுந்தது.

இதில் பக்கத்தில் உள்ள கட்டிடங்களும் பாதிப்படைந்தன. இதில், பக்கத்து கட்டிடத்தில் இருந்த 80 வயது முதியவர் ஒருவர் பலியானார். அவருடைய மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

எனினும், இந்த சம்பவத்தின்போது, அவர்களின் மகன் உடன் இருந்தது பற்றிய தெளிவான தகவல் எதுவும் தெரியவில்லை என பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தின் பாதுகாப்பு மந்திரி ஜேவியர் அலோன்சோ கூறியுள்ளார்.


இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட அவசரகால குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஹோட்டல் இடிந்து விழுந்த சம்பவத்தில், 9 பேரை காணவில்லை என கூறப்படுவதுடன் அவர்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பொறியியலாளர்கள் மற்றும் ஒரு மோப்ப நாய் குழு உள்ளிட்ட மத்திய போலீசின் சிறப்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்பு மந்திரி ஜேவியர் அலோன்சோ தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்