பிரான்சின் தேசிய உடை எது..??!!
16 புரட்டாசி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 18642
பிரான்சுக்கு என ஏதேனும் தேசிய உடை இருக்கின்றதா என்ன..?? இந்த கேள்விக்கான விடையை இன்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரிந்துகொள்ளலாம்.
பிரான்சுக்கு என சில பாரம்பரிய ஆடைகள் உள்ளது. ஆனால் அந்த உடையினை அணிந்த எந்த நபர்களையும் நீங்கள் பரிசுக்குள் காண முடியாது. பிரெஞ்சு கிராமங்களில் உள்ளவர்களே தற்போது இதுபோன்ற உடைகளை அணிகின்றனர். அதிலும் ஏதேனும் விழாக்கள் விஷேசங்களின் போது மாத்திரமே அவர்கள் அந்த உடையினை அணிகின்றார்கள்.
பெரும் சரிகைகள் கொண்ட உடை அணியும் பெண்கள், தலையில் வைக்கோலினால் செய்யப்பட்ட தொப்பிகளையும் அணிந்து, கிட்டத்தட்ட திருண பெண்கள் போல் காட்சியளிக்கின்றனர். பெண்களது பாரம்பரிய உடை மிக நீளமான உடைகளாக இருக்கும்.
ஆண்களின் உடை மிக சிம்பிளானது. ஒரு முழு கால்சட்டை மற்றும் சாதாரணமான ஒரு சேர்ட். ஒரு மேலாடை, ஒரு தொப்பி... இவை மாத்திரமே ஆண்கள் அணிந்து கொள்கின்றார்கள். கிராமங்களில் அல்லது காய்கறி தோட்டங்களில் இருக்கும் ஆண்களை இதுபோன்ற உடையில் நீங்கள் காணலாம்.
இந்த உடை பிரான்சின் தேசிய உடையா... என்றால் இல்லை.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு பின்னால் இந்த உடைகளில் மாற்றம் வந்தது.
பின்னர் பிரெஞ்சு இளைஞர் யுவதிகள் எல்லாம் மிக சிம்பிளாக உடை அணிய ஆரம்பித்துவிட்டார்கள்.
வெள்ளை நிற சேர்ட்களை பிரெஞ்சு ஆண்கள் பெரிதும் விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். அதே வெள்ளை நிறத்தில், டி.சேர்ட்களை அணிய ஆரம்பித்துவிட்டார்கள் பெண்கள்.
இன்றைய திகதியில் உலகத்திற்கு புதிய உடைகளையும், நவீன ஆடைகளையும் அறிமுகம் செய்யும் பிரெஞ்சு தேச ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில 'சிம்பிளான' உடைகளே பிடிக்கின்றதாம்.
பரிசில் உள்ள மிகப்பெரிய 'சொப்பிங்' விற்பனையகமான Galerie Lafayette நிறுவனத்தினர் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.
சரி, பிரெஞ்சு தேசத்துக்கு என ஒரு தேசிய ஆடை உள்ளதா..??
சோகம் என்னவென்றால் "இல்லை".
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் உடைகள் மாற்றம் பெற்றுக்கொண்டே வருகின்றன. நிரந்தரம் என்று எதுவுமில்லை என்கின்றார்கள் பிரெஞ்சு மக்கள். அட...