Paristamil Navigation Paristamil advert login

தீபாவளி ரவா லட்டு செய்வது எப்படி?

தீபாவளி ரவா லட்டு செய்வது எப்படி?

30 ஐப்பசி 2024 புதன் 15:03 | பார்வைகள் : 561


தீபாவளி பலகாரங்களில் ரவா லட்டுக்கும் முக்கிய இடம் உண்டு. இதை செய்யும்போது அதன் பக்குவம் அறிந்து செய்ய வேண்டும். இல்லையெனில் கடிக்கவே முடியாதபடி கல் போல் மாறிவிடும். எனவே இந்த ரெசிபியை ஃபாலோ பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள் :

ரவை - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
ஏலக்காய் - 1 ஸ்பூன்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
பால் - 1/4 கப்
முந்திரி - கையளவு
உலர் திராட்சை - சிறிதளவு


செய்முறை

முதலில் கடாய் வைத்து நெய் விட்டு முந்திரி, திராட்சைகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் விட்டு ரவையை கொட்டி வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

சர்க்கரையை மிக்ஸியில் பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள். பின் ரவையையும் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி எடுங்கள்.

அரைத்த ரவையை கிண்னத்தில் கொட்டி அதில் வறுத்த முந்திரி திராட்சை மற்றும் 1 ஸ்பூன் நெய் விட்டு பிசைந்துகொள்ளுங்கள்.

பிடிக்க ஏதுவாக காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசைந்துகொள்ளுங்கள். உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் பால் ஊற்ற வேண்டாம்.

தற்போது எலுமிச்சை அளவு மாவை எடுத்து லட்டு போல் உருட்டுங்கள். இப்படி ஒவ்வொன்றாக உருட்டி எடுத்தால் ரவா லட்டு மிருதுவாக தயாராகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்