தமிழகம் முழுவதும் களை கட்டியது தீபாவளி!
31 ஐப்பசி 2024 வியாழன் 02:33 | பார்வைகள் : 6027
தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் இனிப்பு, பட்டாசு, ஜவுளி விற்பனை அமோகமாக நடந்தது.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து சிறுவர், சிறுமியர் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருவதை வீதிக்கு வீதி காண முடிகிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
பண்டிகையை கொண்டாட, சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து ரயில்களில் மட்டும் கடந்த 3 நாட்களில் சுமார், 5.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர்.
சென்னையில் இருந்து அரசு, ஆம்னி பஸ்கள், ரயில்கள் மூலம் நேற்று ஒரே நாளில், 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். இதேபோல, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னையில், 18 ஆயிரம் போலீசார் உட்பட மாநிலம் முழுவதும், 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு தீ விபத்து ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபட அனைத்து மாவட்டங்களிலும் தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan