Paristamil Navigation Paristamil advert login

Crêpe உணவு - சில ஆச்சரிய தகவல்கள்...!!

Crêpe உணவு - சில ஆச்சரிய தகவல்கள்...!!

14 புரட்டாசி 2019 சனி 10:30 | பார்வைகள் : 19001


<<க்ரெப்>> எனும் ஒரு உணவு பிரான்சில் மிக பேமஸ். பரிசில் வீதிகளில் அலைந்தால்.. ஒவ்வொரு மூலைகளிலும் இந்த உணவு விற்பனையாகும் ஒரு கடையை காண்பீர்கள்..
 
இது கோதுமையினால் செய்யப்படும் ஒரு மெல்லிய சப்பாத்தி போன்ற உணவு. ஆனால் சப்பாத்தி ஆட்டா மாவினால் செய்யப்படுகின்றது. இது கோதுமை மாவினால் செய்யப்படுகின்றது. இந்த உணவு பிரான்சில் தான் தோன்றியது. 
 
முட்டை, பால், கோதுமை மா, கொஞ்சம் உப்பு சேர்ந்து செய்யப்படும் இந்த உணவு உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு உணவகங்களிலும் கிடைக்கின்றது. 
 
இந்த உணவில் இரண்டு வகை உள்ளது. crêpes sucrées எனும் இனிப்பு உணவும், crêpes salées எனும் கேலட் உணவும் உள்ளது. அவரவர் விருப்பத்துக்கு வாங்கி சாப்பிடலாம். 
 
பெப்ரவரி 2 ஆம் திகதி, கன்னி மாதாவுக்குரிய நாள் அல்லவா.. அன்றைய நாளில் பொதுவாக இந்த உணவும் தான் வீடுகளில் தயாரிக்கப்படும், அன்றைய நாளை Le Jour des Crêpes என கூட அழைப்பார்கள். சிலவேளைகளில் National Crêpe Day (தேசிய Crêpe நாள்) என்று கூட அழைப்பதுண்டு. 
 
உணவுக்காக எல்லாம் ஒரு நாளை ஒதுக்கியுள்ள பிரெஞ்சு காரர்களை என்னவென்று சொல்வது...
 
இந்த உணவும், அது தரும் வாசமும்... நீங்கள் ஒரு கடி கடிக்காமல் கடையை தாண்ட விடாது உங்கள் நாசி...
 
என்னது ரெசப்பியா..?? பிரெஞ்சு புதினத்தில் இதுவரை ஒரு உணவுக்கான ரெசப்பி பகிர்ந்ததில்லை... அதிகப்பேர் கேட்டால் தருகின்றோம். டீல்..???!!!! 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்