இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் - புதிய தலைவர் ஒப்பந்தத்துக்கு தயார்
31 ஐப்பசி 2024 வியாழன் 13:13 | பார்வைகள் : 1920
இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதலில் எதிர்பாராத விதமாக ஒப்பந்தத்துக்கு தயார் என்று ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் கூறியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லா கடந்த மாதம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நைம் கஸ்ஸம் என்பவர் ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
அவர் தலைவரானதும், கஸ்ஸமுடைய படத்தை வெளியிட்டு, அதன் அருகே, இந்த பதவி தற்காலிகமானதுதான், உங்கள் கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது என எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரான Yoav Gallant.
அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்யப் போவதாக நைம் கஸ்ஸம் மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது.
ஆனால், தற்போது யாரும் எதிர்பாராத வகையில், இஸ்ரேல் நம்பத்தகுந்த ஒரு ஒப்பந்தத்தை முன்வைக்குமானால், அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என நைம் கஸ்ஸம் தற்போது தெரிவித்துள்ளார்.
மோதலை நிறுத்த விரும்புவதாக இஸ்ரேல் முடிவு செய்யுமானால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயார். என்றாலும், சில முறையான மற்றும் பொருத்தமான நிபந்தனைகளின் கீழ் இஸ்ரேலின் முடிவை ஏற்றுக்கொள்ளத் தயார் என நைம் கஸ்ஸம் தெரிவித்துள்ளார்.