நெடுஞ்சாலையில் உள்ள புதிய ரேடார் கருவிகளும் அதன் திறன்களும்...!! (பகுதி 2)
12 புரட்டாசி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 18531
குறிக்கப்பட்ட வேகத்தை விட வேகமாக பயணிப்பது குற்றம் அல்லவா.. அதுபோல் நெடுஞ்சாலையில் மிக குறைந்த வேகத்தில் பயணிப்பகும் குற்றம். (விபத்து இலகுவில் ஏற்படும்)
அதையும் கண்காணிக்கும் இவ்வகை ரேடார்கள். மிக குறைந்த வேகத்தில் பயணித்தாலும் தகவல் திரட்டும்.
இலக்கத்தகடுகள் இல்லாமல் சென்றாலோ மறைத்துவிட்டுச் சென்றாலோ உங்கள் வாகனத்தை தெள்ளத்தெளிவாக புகைப்படம் எடுத்து நொடிக்குள்ளாக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடும். நிச்சயம் ஜோந்தாமி விசாரிக்கும்.
உங்கள் வாகனம் என்ன வகை என்பதை கண்காணிப்பதோடு, அதற்காக வேக வரம்பில் பயணிக்கின்றதா என்பதையும் ஒருசேர அவதானிக்கும். கனரக வாகனம் ஒன்றுக்கு 50 கி.மீ வேகம் என்றாலும், மகிழுந்துக்கு 90 கி.மீ வேகம் ஒன்றாலும் ஒரே நேரத்தில் இரண்டையும் கணக்கிடும். இப்படி 32 வாகனங்களை ஒரே நேரத்தி கணக்கிடும்.
இந்த ரேடார் கருவிகள் -40°C குளிரையும், +55°C வெப்பத்தையும் தாங்கும். தவிர IP 66 சான்றிதழ் உள்ளதால் எந்த பேய் மழையையும் தாங்கும்.
சிக்னலில் காத்திருக்கும் போது நீங்கள் முந்தைய வாகனத்துக்கு எவ்வளவு தூரத்தில் இருக்கின்றீர்கள் எனகும் கணக்கிடும்.
தவிர, ரேடார் கருவிக்கு ஆறு மீற்றர் இடைவெளியில் யார் வந்தாலும் ஆவர்களை விதம் விதமாக புகைப்படம் எடுத்து விரைவாக கட்டுப்பாடு அறைக்கு அனுப்பிவிடும்.
வருபவர்கள் ரேடார் கருவியை உடைக்க முனைந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு 'அவசர ஒலி' எழுப்பும் திறனும் கொண்டது.
எப்படி பார்த்தாலும் பெரும் வில்லங்கமாகத்தான் உள்ளது.
நாங்கள் என்ன சொல்கின்றோம் என்றால்.. விதி போக்குவரத்தில் அவதானமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் ஓடவும் ஒளியவும் முடியாது.. !!