இன்று முதல் நடைமுறைக்கு வரும் ‘ trêve hivernale’ சட்டம்!!
1 கார்த்திகை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 3450
ஆண்டு தோறும் குளிர்காலத்தின் போது கொண்டுவரப்படும் ‘ trêve hivernale’ எனும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கான சட்டம் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், ‘வாடகைப் பணம்’ செலுத்தவில்லை எனும் காரணத்திற்காக அவர்களை விட்டில் இருந்து வெளியேற்றும் அனுமதியை மறுக்கிறது இந்த சட்டம். வருடத்தில் ஐந்து மாதங்கள் நடைமுறையில் இருக்கும் இந்த சட்டம், இன்று ஆரம்பித்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
குளிர்காலத்தின் போது வீடுகள் கிடைக்காமல் சிரப்படுவதையோ அல்லது வீதிகளில் படுத்துறங்குவதையோ தடுக்கும் முகமாக இந்த சட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஐந்து மாதங்களில் ஒப்பந்தம் நிறைவடைந்தால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் எனும் விதிவிலக்கு உண்டு. அதேவேளை, குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக நீதிமன்றத்தால் பணிக்கப்பட்டாலும் வீடுகளை விட்டு வெளியேற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.