ஜம்மு காஷ்மீரில் செனாப் பாலம்... மூக்கு வியர்த்துப் போன சீனா, பாகிஸ்தான்
1 கார்த்திகை 2024 வெள்ளி 10:18 | பார்வைகள் : 5755
ஜம்மு காஷ்மீரில் தயாராகி வரும் செனாப் ரயில்வே பாலம் குறித்து சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தகவல்களை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான இந்த ரயில் பாலத்தின் மீது, சங்கல்தான் - ரியாசி இடையே ரயில் சோதனை ஓட்டத்தை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தி காட்டியது.
ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட, 115 அடி அதிக உயரத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த அதிசய பாலம், 'லிம்கா' சாதனைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த ரயில் திட்டப் பணிகள் முழுவதுமாக முடிவடையும் பட்சத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளுடனான ரயில் சேவையில் ஜம்மு காஷ்மீரும் இணைக்கப்பட்டு விடும். சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள், குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டால், வாகனங்களை இயக்க முடியாத சூழல் உண்டாகும். தற்போது, செனாப் பால ரயில்வே திட்டத்தின் மூலம், அவர்களுக்கு மாற்று வழி உருவாகியுள்ளது.
இந்த நிலையில், செனாப் ரயில்வே திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், தற்போது சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு மூக்கு வியர்த்துள்ளது. குறிப்பாக, நீண்ட ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரை சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தானுக்கு, மத்திய அரசு அங்கு மேற்கொண்டு வரும் கட்டமைப்புகள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், என்ன செய்வதென்றே திகைத்து போயுள்ளது. இந்த சூழலில், செனாப் ரயில்வே பாலம் குறித்து சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அதிகாரிகள், தகவல்களை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி
RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025


























Bons Plans
Annuaire
Scan