Paristamil Navigation Paristamil advert login

தயிர் உறைவது ஏன் என்பதை கண்டறிந்த பிரெஞ்சு விஞ்ஞானி..!!

தயிர் உறைவது ஏன் என்பதை கண்டறிந்த பிரெஞ்சு விஞ்ஞானி..!!

10 புரட்டாசி 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18233


தயிர் முதலில் எங்கு உருவானது என்பது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் அது உறைவது ஏன் என்பதற்கான 'பார்முலா'வை பிரெஞ்சு தேசம் கண்டறிந்தது. 
 
தயிரும் சரி, யோகட் பொருட்களும் சரி.. அது உடலுக்கு தீங்கு விளைவிக்காத பக்டீரியாவினால் தான் ஏற்படுகின்றது.  
Streptococcus thermophilus எனும் பக்டீரியா, அல்லது Lactobacillus bulgaricus எனும் பக்டீரியா தோன்றினால் தான் பால் உறைந்து தயிராக மாறும். 
 
பிரெஞ்சு விஞ்ஞானி Louis Pasteur ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார். 'பியர்' மற்றும் வைனை சூடாக்குவதன் மூலம் அதிலுள்ள பக்டீரியாக்களை கொல்லலாம். இதனால் அப்பொருட்கள் கெட்டுப்போவதை தடுக்கலாம். 
 
பாலியை காய்ச்சுவதன் மூலம் கெட்டுப்போவதை சில மணிநேரம் தள்ளி வைக்கலாம். 
 
அதேவேளை, பாலில் நல்ல பக்ரீயாக்கள் இருந்தால் அது தயிராக மாறுகின்றது எனவும், அது உடலுக்கு நல்லது எனவும் அதை செயறை முறையில் உருவாக்கலாம் எனவும் கண்டறிந்தார். 
 
1864 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சியின் முடிவு அறிவிக்கப்பட்டது. 
 
 
Pasteurization என அழைக்கப்படும் இந்த பார்முலா இன்று உலகம் முழுவதும் மிக பிரபலம். 
 
பால்வினை பொருட்கள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த வழிமுறையையே கையாளுகின்றன. 
 
தயிர் உறைவது வேண்டுமானால் முன்னரே கண்டறியப்பட்டிருக்கலாம்... ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்தவர் Louis Pasteur ஆவர். 
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்