தீப்பிடித்து எரிந்த மின்சார பேருந்துகள்.. மின்கலன் தயாரிப்பு நிறுவனம் மீது விளக்கம்!!
1 கார்த்திகை 2024 வெள்ளி 14:45 | பார்வைகள் : 538
பரிசில் கடந்த 2022 ஆம் ஆண்டில் இரண்டு மின்சார பேருந்துகள் தீப்பிடித்து எரிந்திருந்தன. புறக்காரணிகள் எதுவும் இன்றி திடீரென தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த விசாரணைகளில், மின்சார பேருந்துகளுக்கான மின்கலன் தயாரிப்பில் உள்ள முறைகேடு காரணம் என பேருந்து நிறுவனமான Bolloré குழுமம் குற்றம் சாட்டியது. மின்கலன்களில் உள்ள பழுது காரணமாக அவை வெடித்ததாகவும், அதை அடுத்தே பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்தது.
தயாரித்த நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, அந்நிறுவனத்துக்கும் தற்போது விளக்கம் கோரப்பட்டுள்ளது.
RATP நிறுவனத்துக்குச் சொந்தமான 149 மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் சேவையில் இருந்து நிறுதப்பட்டுள்ளன.