சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா?
1 கார்த்திகை 2024 வெள்ளி 14:49 | பார்வைகள் : 222
கொலாஜன் என்பது, நமது உடலில் இருக்கும் தசைகள், எலும்பு, தோல், ரத்த குழாய்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றில் உள்ள ஒருவகை புரதம் ஆகும். குறிப்பாக நம் உடலில் அதிக அளவில் உள்ள இந்த வகை புரதம் நம்முடைய எலும்புகள், தோல், முடி, நகங்கள் போன்றவற்றுக்கு உறுதியான கட்டமைப்பு மற்றும் வலிமையை வழங்குகிறது.
மேலும் இறந்த சரும செல்களை மாற்றுவதில் கொலாஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் சருமத்திற்கு அமைப்பு, வலிமை மற்றும் நெகிழ்ச்சி தன்மையை அளிக்கிறது. எனினும் நமக்கு வயதாகும் போது கொலாஜன் உற்பத்தி இயற்கையாகவே குறைகிறது. உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை எப்படி மேம்படுத்தலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்: சிட்ரஸ் பழங்கள், பெர்ரி மற்றும் பெல் பெப்பர் (குடை மிளகாய்) போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உண்பது, ஸ்டபிலைஸ் செய்வதற்கு பொறுப்பான நொதிகளுக்கு கோ-ஃபேக்ட்டராக செயல்படுவதன் மூலம் சருமத்தில் கொலாஜனை ஒருங்கிணைக்க மற்றும் கொலாஜன் மூலக்கூறுகளை கிராஸ்-லிங்கிங் செய்ய உதவுகிறது.
கொலாஜன் சப்ளிமென்ட்ஸ்: கொலாஜன் சப்ளிமென்ட்ஸ்ஸ் எடுத்து கொள்வது, குறிப்பாக ஹைட்ரோலைஸ்ட் கொலாஜன் எடுப்பது சருமத்தின் நெகிழ்ச்சி தன்மை மற்றும் ஹைட்ரேஷனை மேம்படுத்தலாம். இந்த சப்ளிமென்ட்ஸ்களில் peptides உள்ளன, இவை உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, சருமம் இயற்கையான கொலாஜன் அளவை மீட்டெடுக்க உதவுகின்றன.
ரெட்டினாய்ட்ஸ்: ரெட்டினோல் போன்ற டாபிக்கல் ரெட்டினாய்டுகள் ஸ்கின் செல் டர்ன்ஓவரை விரைவுபடுத்துவதன் மூலம் மற்றும் புதிய ஸ்கின் செல்களின் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகின்றன. இவை சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை குறைக்கலாம், ஸ்கின் டோனை மேம்படுத்தலாம் மற்றும் கொலாஜன் சிந்தஸிஸை ஊக்குவிப்பதன் மூலம் சருமத்தின் மென்மையான அமைப்பை மேம்படுத்த கூடும்.
கொலாஜன் பெட் தெரபி: இந்த சிகிச்சையில் தோலில் கொலாஜன் உற்பத்தியைத் தூண்ட வேவ்லென்த்தை வெளியிடும் ரெட் லைட் தெரபி படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன.. இந்த சிகிச்சையானது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த, சுருக்கங்களை குறைக்கவும், உடலின் இயற்கையான கொலாஜன் சிந்தஸிஸை ஊக்குவிப்பதன் மூலம் இளமை தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
ப்ரோட்டீன் நிறைந்த டயட்: லீன் மீட்ஸ், முட்டைகள் மற்றும் பீன்ஸ் மற்றும் பருப்பு போன்ற தாவர அடிப்படையிலான புரத உணவுகளை உள்ளடக்கிய புரதம் நிறைந்த டயட்டை பின்பற்றுவது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. கொலாஜனுக்கான அத்தியாவசிய விஷயமாக உள்ள கிளைசின் மற்றும் ப்ரோலின் போன்ற அமினோ ஆசிட்ஸ்களை ப்ரோட்டீன்கள் வழங்குகின்றன.
எலும்பு சூப்: பொதுவாக ஆடு போன்ற விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படும் எலும்பு சூப்பானது கொலாஜன், ப்ரோலின் மற்றும் கிளைசின் போன்ற அமினோ ஆசிட்ஸ்களின் வளமான மூலமாகும், இது சரும கட்டமைப்பை பராமரிக்க உதவுகிறது. எலும்பை சூப் வைத்து அடிக்கடி எடுப்பது கொள்வது இயற்கையாகவே கொலாஜன் அளவை அதிகரிக்கும், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும் மற்றும் சுருக்கங்களை குறைக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த டயட்: பெர்ரிக்கள், நட்ஸ் மற்றும் பச்சை இலை காய்கறிகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நம் உடலில் உள்ள கொலாஜனை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிலிருந்து பாதுகாக்கிறது. தவிர ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் கொலாஜனை சேதப்படுத்தும் மற்றும் முன்கூட்டிய வயதானதற்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸை நியூட்ரலாக்குகின்றன.
சர்க்கரை நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும்: அதிகப்படியான சர்க்கரை நுகர்வு கிளைகேஷனுக்கு வழிவகுக்கும். சர்க்கரை சேர்ப்பதை குறைப்பதன் மூலம், நம் சருமத்தில் இருக்கும் கொலாஜன் சேதமடைவதை தடுத்து பாதுகாக்கலாம். காலப்போக்கில் சருமம் ஆரோக்கியமாக மற்றும் அதிக நெகிழ்வுதன்மை உடையதாக மாற வழிவகுக்கும்.
சன்ஸ்கிரீன்: கொலாஜனை பாதுகாக்க, புற ஊதா கதிர்வீச்சிலிருந்து நம் சருமத்தை பாதுகாப்பது முக்கியம். இதற்காக குறைந்த பட்சம் SPF 30 கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்தவுது நம் சருமத்தை தீங்கு விளைவிக்கும் UVA மற்றும் UVB கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவும். சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் கொலாஜன் சிதைவை தடுக்கலாம்.