baguette உருவானதன் பின்னணியில் உள்ள சுவாரஷ்ய கதை..!!
9 புரட்டாசி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 18515
<<The Baguette>> பிரான்சின் உணவுகள் மிக பிரபலமானது இது. இது ஒரு வெதுப்பி. (பாண்)
வெளி நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த Baguette குறித்த ஒரு ஆர்வத்தோடு தான் வருவார்கள். இன்றைய திகதியில் வேறு பல நாடுகளிலும் இது கிடைத்தாலும், இதன் பிறப்பிடம் பிரான்ஸ் தான்.
ஆனால் இது எப்படி உருவானது என்பது ஒரு சுவாரஷ்ய கதை...
Baguette வெதுப்பி மிக மெல்லியதாகவும், நீளமாகவும் இருக்கின்றது அல்லவா...?
1920 ஆம் ஆண்டு வரையில் பிற நாடுகள் போல் வெதுப்பி தட்டையாகவும், அகலமாகவுமே இருந்தன. ஏன் பணிஸ் கூட அந்த 'சைசில்' தான் இருந்தது.
ஆனால், ஒக்டோபர் 1920 ஆம் ஆண்டு ஒரு புது சட்டம் இயற்றப்பட்டது.
அதாவது, வெதுப்பக ஊழியர்கள் அதிகாலை 04:00 மணிக்கு முன்னர் பணியில் ஈடுபடக்கூடாது என்பதே அந்த சட்டம்.
இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 04:00 மணி வரை கட்டாய விடுப்பு வழங்கவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் தான் பணி புரிய வேண்டும்.
அதிகாலை 4 மணிக்கு வெதுப்பகத்துக்கு வந்தால் எப்படி பாண் தயாரிப்பதாம்..??!!
ஊழியர்கள் துரித வேகத்தில் பாண் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட வடிவம் தான் தற்போது நீங்கள் பார்க்கும் baguette..!!
இந்த baguette மிக மிக வேகமாக தயாரிக்க முடிந்தது. காலை உணவுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களை முக சுழிக்க வைக்காமல் அவர்களுக்கு இந்த baguette இனை தயாரித்து வழங்கினார்கள்.
இன்று இதற்கு கவர்ச்சியான லேபிள்கள் விளம்பரங்கள் என வியாபாரம் படு ஜோர்...
வேகமாக தயாரிப்பதற்காகவே இது உருவானது என்பது தான் உண்மை. இருக்கட்டும்.