Paristamil Navigation Paristamil advert login

தொலைபேசியில் கேமரா ஏன் வந்தது? - பிரெஞ்சுக்காரர் செய்த குறும்பு..!!

தொலைபேசியில் கேமரா ஏன் வந்தது? - பிரெஞ்சுக்காரர் செய்த குறும்பு..!!

8 புரட்டாசி 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18071


1990 ஆம் வருடம் ஆரம்பித்திருந்த போது தொழில்நுட்பம் அளவு கணக்கில்லாமல் அரசு வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தது.  
 
ரெண்டு கிலோ எடையுள்ள தொலைபேசியில் இருந்து, தொழில்நுட்பம் உள்ளங்கைக்குள் தொலைபேசியை கொண்டுவந்ததுடன், இணையத்தையும் கொண்டுவந்து சேர்த்தது. 
 
ஆரம்பத்தில் MMS என ஒரு வசதி இருந்தது. (இப்போதும் தான் உள்ளது.. ஆனால் அதை யார் பயன் படுத்துகின்றார்கள் என்றுதான் என தெரியவில்லை) 
 
இந்த MMS வழியாக சிறிய கோப்புக்களை (Kb அளவுகளில் மாத்திரம்) அனுப்பலாம். 
 
ஆனால் அது ஒரு புகைப்படமாக மாத்திரம் தான் இருக்கும். 
 
இப்படி ஒருக்கும் போது, Philippe Kahn எனும் பிரெஞ்சு காரரின் மனைவி கர்ப்பியாக இருந்தார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க இருந்தது. 
 
அக்குழந்தை பிறந்தவுடன் புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கும், பெற்றோருக்கும் அனுப்ப வேண்டி இருந்தது. 
 
ஆனால், கேமராவில் குழந்தையை போட்டோ எடுத்து, அதை கழுவி எடுத்து (அட அந்தகாலத்துல அப்பிடித்தாம்பா...) அத கொரியர்ல அனுப்பி.. அது எப்ப போய் சேருரது..? 
 
அப்போது தான் அவருக்கு இந்த 'பளிச்' ஐடியா தோன்றியது. தொலைபேசியில் சிறிய கேமராவை பொருத்தி போட்டோ எடுத்து, MMS வழியாக அனுப்பினால் 'நொடிக்குள்' சென்றடைந்துவிடும் எனும் ஐடியா தான் அது. 
 
இரவு பகலாக உழைந்து ஒரு கேமராவை தொலைபேசிக்குள் அடைத்துவிட்டார். 
 
இந்த உலகம் முதன் முதலாக கேமராவை கொண்ட தொலைபேசி ஒன்றை பார்த்தது. 
 
அவரது குழந்தையை புகைப்படம் எடுத்து பெற்றோருக்கு அனுப்பினார். 
 
வெற்றி..!!
 
இச்சம்பவம் இடம்பெற்றது 1997 ஆம் ஆண்டில். இன்று ஏன் எதற்கு என தெரியாமல் உங்கள் தொலைபேசியில் ஐந்தாறு கேமராக்கள் உள்ளது என்பது தனிக்கதை...!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்