Ind vs NZ 3rd-test Day1! ஆட்டநேர முடிவில் 149 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள இந்தியா
2 கார்த்திகை 2024 சனி 11:08 | பார்வைகள் : 803
மும்பை டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இன்றய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்தை விட இந்திய அணி முதல் இன்னிங்சில் 149 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது.
அதைத்தொடர்ந்து இந்திய அணி அடுத்து 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்தது.
முதலாவதாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை இஜாஸ் படேல் தொடர்ச்சியாக இரண்டு பந்துகளில் வெளியேற்றினார்.
அப்போது விராட் கோலி ரன் அவுட் ஆனார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30, ரோஹித் சர்மா 18, விராட் கோலி 4, முகமது சிராஜ் பூஜ்ஜியம் ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் திரும்பினர்.
முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல், வில் யங் அரைசதம் அடித்தனர்.
மிட்செல் 129 பந்துகளில் 82 ஓட்டங்களும், யங் 138 பந்துகளில் 71 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆகாஷ் தீப் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.