லெபனான் விவசாய கிராமங்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 52 பேர் பலி
2 கார்த்திகை 2024 சனி 11:15 | பார்வைகள் : 1352
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 52 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை வடக்கு லெபனானில் உள்ள விவசாய கிராமங்கள் மீது இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 52 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான சுகாதார அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் வியாழக்கிழமை மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 25 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இஸ்ரேல்-ஹமாஸ் மற்றும் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா அமைப்பு இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கத்தாரில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை இஸ்ரேல்-லெபனான் இடையிலான மோதலில் இதுவரை 2,900 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 13,150 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இதில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த 52 பேர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான ஓராண்டுக்கு மேலான சண்டையில் இதுவரை பெண்கள் குழந்தைகள் உட்பட 42,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.