Paristamil Navigation Paristamil advert login

பசி உணர்வை கட்டுப்படுத்தவும் உதவும் பழங்கள் பற்றித் தெரியுமா?

பசி உணர்வை கட்டுப்படுத்தவும் உதவும் பழங்கள் பற்றித் தெரியுமா?

2 கார்த்திகை 2024 சனி 12:15 | பார்வைகள் : 649


உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள் எப்போதும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று உணவு பசியைக் கட்டுப்படுத்துவதாகும். பசி என்பது சிறிய வார்த்தை தான், ஆனால் உடல் பருமனாக உள்ள நபர்களுக்கு இது அடிப்படை பிரச்சினையாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, இயற்கை இதற்கு ஒரு சிறந்த தீர்வை பழங்களின் வடிவத்தில் வழங்குகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரைகள் நிரம்பியுள்ள சில பழங்கள் இனிப்பு பசியை திருப்திப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பசி உணர்வை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், அவை எடை குறைப்புக்கான சிறந்த தேர்வாக அமைகின்றன. பசி உணர்வை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான எடை குறைப்புக்கும் உதவும் சில சிறந்த பழங்களை பற்றி பார்ப்போம்.


  உணவுக்கு இடையில் பசி உணர்வு ஏற்படும்போது ஆப்பிள்கள் ஒரு சிறந்த தேர்வாகும் . ஏனென்றால் ஆப்பிளில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. குறிப்பாக, பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து ஆப்பிளில் அதிகம் உள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது கரைந்து விடும். மேலும், இது முழுமை உணர்வை தருவதோடு மட்டுமல்லாமல், செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆப்பிள்களை தோலுடன் அப்படியே சாப்பிடும் போது, தோலில் உள்ள நார்சத்து உடலுக்கு கிடைக்கிறது. ஏனெனில் பழத்தை விட தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும் ப்ரோடீன் நிறைந்த ஸ்னாக்-களுக்கு, ஆப்பிளுடன் பீநட் பட்டரை சேர்த்து சாப்பிடவும்.

 (ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி) : ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. பெர்ரிகளில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. அவை உங்கள் அடுத்த உணவு சாப்பிடும் வரை முழுதாக உணர உதவும் திருப்திகரமான தேர்வாக அமைகின்றன. குறிப்பாக, ப்ளூபெர்ரிகள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், பசி உணர்வை குறைக்கவும் உதவுகின்றன.

 வாழைப்பழங்கள் பெரும்பாலும் அதிக கலோரி கொண்ட பழமாக கருதப்படுகிறது, ஆனால் அவை பசி உணர்வை கட்டுப்படுத்த உதவும் சிறந்த தேர்வாக அமைகின்றன. வாழைப்பழங்களில் மாவுச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கிறது. கூடுதலாக, வாழைப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வாழைப்பழத்தை ஸ்னாக்-க்காக சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்தியில் சேர்த்து சாப்பிடலாம்.

  அவகாடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. அவகாடோ பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மனநிறைவை அளிக்கின்றன, மேலும் பசி உணவை கட்டுப்படுத்துகின்றன. சாலட்களில் அவகாடோ பழத்தாய் துண்டுகளைச் சேர்த்து சாப்பிடவும்.

திராட்சைப்பழம் பெரும்பாலும் எடை குறைப்புக்கு ஏற்ற பழமாக கூறப்படுகிறது. திராட்சைப்பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. உணவுக்கு முன் திராட்சைப்பழத்தை சாப்பிடுவது கலோரி அளவைக் குறைக்கிறது மற்றும் பசி உணர்வை கட்டுப்படுத்துகின்றன. உணவுக்கு முன் திராட்சைப்பழத்தை சாப்பிடுங்கள் அல்லது ஜூஸ் குடியுங்கள்.


உணவுக்கு இடையில் பசி உணர்வு ஏற்படும்போது பேரிக்காய் ஒரு சிறந்த தேர்வாகும். பேரிக்காயில் பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து ஆப்பிளில் அதிகம் உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் முழுமையான உணர்வை தருவதோடு மட்டுமல்லாமல், செரிமானத்தை மேம்படுத்துகிறது. பேரிக்காய்யை துண்டுகளாக நறுக்கி நட்ஸ்களுடன் சேர்த்து சாப்பிடவும்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழ ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக, முழு ஆரஞ்சு பலத்தையும் அப்படியே சாப்பிடுவது, உங்களை முழுமையாக உணர வைக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், பசி உணர்வை குறைக்கவும் உதவுகின்றன.
எடை குறைப்புக்கான உதவிக்குறிப்பு: ஆரஞ்சு பழத்தை ஜூஸ்-ஆக க்ளுடிக்கலாம் அல்லது முழு பலத்தையும் அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட்டிலும் 

அன்னாசிப்பழம் ஒரு வெப்பமண்டல பழமாகும், இதில் உள்ள அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து காரணமாக பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. அதன் இயற்கையான இனிப்பு சர்க்கரை பசியை பூர்த்தி செய்வதோடு செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது வீக்கம் மற்றும் அசௌகரியத்தை குறைக்க உதவுகிறது. அன்னாசிப்பழத் துண்டுகளை தயிர் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்தது சாப்பிடவும்.

கிவி பழமானது நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். கிவி பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் கிவியில் உள்ள இயற்கையான இனிப்பு சர்க்கரை பசியை பூர்த்தி செய்வதோடு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. கிவி பழத்தை ஸ்மூத்தியில் சேர்த்து சாப்பிடவும் அல்லது உணவுக்கு இடையில் ஸ்னாக்-காக சாப்பிடவும்.

: செர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன, அவை பசி உணர்வை குறைக்கும் சிறந்த பழமாக அமைகின்றன. அதில் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி பண்புகள் உள்ளதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.
எடை குறைப்புக்கான உதவிக்குறிப்பு: செர்ரி பழங்களை தயிர் அல்லது ரெசிபிகளில் சேர்த்து சாப்பிடவும்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்