Châtillon : துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்.. மூவர் கைது!!

2 கார்த்திகை 2024 சனி 12:34 | பார்வைகள் : 4733
ஒக்டோபர் 28 ஆம் திகதி திங்கட்கிழமையன்று Châtillon (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்ததை அடுத்து நேற்று நவம்பர் 1 ஆம் திகதி ஆயுததாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Châtillon நகரில் உள்ள ட்ராம் நிறுத்தம் ஒன்றின் அருகே இந்த துப்பாக்கிச்சூடு இரவு 9.30 மணி அளவில் இடம்பெற்றது. ஒருவருக்கு முதுகிலும், ஒருவருக்கு காலிலும் காயமேற்பட்டதை அடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆயுததாரிகள் தப்பி ஓடிய நிலையில், அவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், நேற்று நவம்பர் 1 ஆம் திகதி மூவர் கொண்ட குழுவை கைது செய்தனர். அவர்களே இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.