Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்ச் கனெக்‌ஷன் - அசரடிக்கும் அமெரிக்க சினிமா...!!

பிரெஞ்ச் கனெக்‌ஷன் - அசரடிக்கும் அமெரிக்க சினிமா...!!

7 புரட்டாசி 2019 சனி 10:30 | பார்வைகள் : 17986


Heist சினிமா என அழைக்கப்படும் 'கொள்ளை' தொடர்பான திரைப்படங்கள் உலகம் முழுவதும் மகா பிரபலம். வங்கி கொள்ளை அல்லது ஏதேனும் பெரிய பெட்டகங்களை கொள்ளையடிப்பது தொடர்பான திரைப்படங்கள் அளவு கணக்கில்லாமல் வெளியாகி வெற்றி பெற்றிக்கின்றன. 
 
இந்த பட்டியலில் மிக முக்கியமான திரைப்படம் தான் 'தி பிரெஞ்ச் கனெக்‌ஷன்' (The French Connection) திரைப்படம்.
 
இது ஒரு அமெரிக்க Heist சினிமா. 
 
பிரான்சில் மிகப்பெரும் கொள்ளையனாக கடத்தல் மன்னனாக இருக்கும் Alain Charnier என்பவன் அமெரிக்காவுக்கு போதை மருந்து கடத்துகின்றான். 
 
$32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள ஹெரோயினை அமெரிக்காவுக்கு கடத்தவேண்டும். 
 
மார்செயில் இருந்து நியூயார்க் நகருக்கு கப்பலில் Henri Devereaux எனும் பிரபல நடிகை பயணமாகின்றார். அதை சாதமாக பயன்படுத்தி ஹெரோயினை கடத்த முற்படுகின்றான். 
 
பின்னர் என்ன ஆனது என்பது மீதி திரைப்படம். 
 
ஒரு கொள்ளைச் சம்பவம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இத்திரைப்படம். 
 
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது. 
 
$2.2 மில்லியன் அமெரிக்க டொலர்களில் தயாரான இத்திரைப்படம் உலகம் முழுவதும் $75 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்தது. 
 
பிரபல எழுத்தாளர் Robin Moore எழுதிய The French Connection நாவலை அதே பெயரில் படமாக்கினார்கள்.
 
நேரம் இருக்கும் போது தவறாமல் பாருங்கள்...!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்