போலந்தில் “காட்டேரி-யின்” கல்லறை கண்டுபிடிப்பு: ஆராய்ச்சியாளர் வெளியிட்ட உருவப்படம்!
2 கார்த்திகை 2024 சனி 15:34 | பார்வைகள் : 462
போலந்தில் காட்டேரி(vampire) என்று நம்பப்படும் 400 ஆண்டுகள் பழமையான பெண்ணின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
போலந்து நாட்டின் கடந்த கால மூட நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாக Zosia என்று அழைக்கப்படும் காட்டேரி(vampire) என்ற பெண்ணின் 400 ஆண்டுகள் பழமையான எச்சங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Zosia என்ற இந்த காட்டேரி பெண் கல்லறையில் இருந்து திரும்புவதை தடுக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கல்லறை அம்சங்களுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை கிடைத்துள்ள எச்சங்கள் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.
போலந்தின் பியென்(Pień) நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த Zosia கல்லறையில் பல ஆச்சரியங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்குகிறது.
Zosia கல்லறையில் அவளின் உயர் சமூக நிலையை குறிக்கும் விதமாக உயர்தர உலோக நூல்களால் நெய்யப்பட்ட பட்டு தலைப்பாகை உள்ளது.
மேலும் அவள் கல்லறையில் இருந்து வெளியே வராமல் இருப்பதற்காக அவளுடைய கழுத்தில் அரிவாள் வைக்கப்பட்டுள்ளது மற்றும் கை மற்றும் கால் விரல்களில் பூட்டு போடப்பட்டுள்ளது.
2022ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகளை பகுப்பாய்வு செய்து 3D அச்சிடுதல் மற்றும் களிமண் மாடலிங் ஆகிய தொழில்நுட்பங்கள் மூலம் Zosia-வின் உருவத்தை ஆராய்ச்சியாளர்கள் மீட்டெடுத்துள்ளனர்.
அதில், Zosia வெள்ளை நிற தோல், நீல நிற கண்கள் மற்றும் வித்தியாசமான வெட்டுப்பல் ஆகியவற்றை கொண்டுள்ளார்.