Postes, télégraphes et téléphones - சில ரகசியங்கள்..!!
6 புரட்டாசி 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18420
ஆரம்பத்தில் பிரான்சில் தகவல் கடத்தும் வேலைப்பாடுகளை எல்லாம் ஒரே தலைமையின் கீழ் கொண்டிருந்தார்கள். எப்படி என்றால்... கடிதம் அனுப்பும் வேலையையும், தொலைத்தொடர்பு வேலையையும் ஒரே நிறுவனமே மேற்கொண்டு வந்தது.
அதாவது, P&T, PTT, P et T ஆகிய சேவைகள் எல்லாமே ஒன்றாக இயங்கின.
1921 ஆம் ஆண்டு இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது 'டெலிகிராம்' சேவை மிக பிரபலம். ஒரு சிலர் மாத்திரமே பயன்படுத்தி வந்ததாலும்... பெரியளவில் சிரமம் ஏதும் இல்லாததாலும், 'தபால்' வேலையை பிரதானமாகவும், தொலைத்தொடர்பு சேவையை இரண்டாவதாகவும் இயக்கி வந்தனர்.
ஆனால், காலம் மாற... கதையும் மாறியது. 1991 ஆம் ஆண்டு, (28 வருடங்களுக்கு முன்னர்..) இரண்டுமே தனித்தனியாக பிரிந்தது.
இதற்கு பிரதான காரணம் தொழில்நுட்ப புரட்சி.
அனைவரது கைகளிலும் தொலைபேசி, இணையம், குறுந்தகவல் சேவை, தொலைபேசி என அடுத்தடுத்து உலகம் மாற.. Postes, télégraphes et téléphones நிறுவனத்தால் இணைந்து பணியாற்ற முடியவில்லை.
'லா போஸ்ட்'டை விட 'தொலைத்தொடர்பு'க்கு அதிக வேலை ஏற்பட்டது.
அதன் பின்னர், இது சரிவராது என உஷார் ஆகி, 1991 ஆம் ஆண்டு இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக பிரிந்தன. France Télécom S.A. ஒரு நிறுவனமும், la Postes தனி நிறுவனமாகவும் இயங்க ஆரம்பித்திருந்தது.