சிக்ஸர் மழை பொழிந்த வீரர்! தொடரை வென்ற இங்கிலாந்து
3 கார்த்திகை 2024 ஞாயிறு 08:52 | பார்வைகள் : 266
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது.
ஆன்டிகுவாவில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.
முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரண்டன் கிங் (7), லீவிஸ் (4) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் கைகோர்த்த கார்ட்டி (Carty) மற்றும் ஷாய் ஹோப் (Shai Hope) கூட்டணி 143 ஓட்டங்கள் குவித்தது. கார்ட்டி 71 (77) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஷீத் ஓவரில் அவுட் ஆனார்.
அடுத்து வந்து ரூதர்போர்டு அதிரடியில் மிரட்டினார். அரைசதம் அடித்த அவர் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
பின்னர் ஹெட்மையர் 24 (11) ஓட்டங்கள் எடுத்து வெளியேற, அணித்தலைவர் ஹோப் சதம் அடித்தார். 127 பந்துகளை எதிர்கொண்ட ஹோப் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 117 ஓட்டங்கள் எடுத்தார்.
50 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட்டுக்கு 328 ஓட்டங்கள் குவித்தது. சேஸ் 20 (22) ஓட்டங்களும், போர்டே 23 (11) ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
அடில் ரஷீத், டர்னர் தலா 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் மற்றும் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.3 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இதன்மூலம் இங்கிலாந்து ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ருத்ர தாண்டவமாடிய லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone) 85 பந்துகளில் 9 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்கள் விளாசினார்.