Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானிய கடலோர பகுதிகளில் ஆபத்தான உயிரினம்.... பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பிரித்தானிய கடலோர பகுதிகளில் ஆபத்தான உயிரினம்.... பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

3 கார்த்திகை 2024 ஞாயிறு 09:46 | பார்வைகள் : 1376


பிரித்தானியாவின் கடலோரப் பகுதிகளில் இந்த வருடம் ஆபத்தான போர்த்துகீசு மேன் ஓ' வார்கள் (Portuguese Man O'War) மிக அதிக அளவில் காணப்பட்டுள்ளன.

கடல்சார் பாதுகாப்பு அமைப்பின் (Marine Conservation Society) சமீபத்திய அறிக்கையில், கடந்த வருடத்தை விட 16 சதவிகிதம் அதிகமாக 280 போர்த்துகீசு மேன் ஓ' வார்கள் பிரித்தானிய கடலோரங்களில் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்த்துகீசு மேன் ஓ' வார்களை பலர் ஜெல்லிபீஷ் (jellyfish) என தவறாக எண்ணினாலும், இது ஒரு சைப்போனோஃபோர் (siphonophore) எனப்படும் சிறிய ஜூவாய்டுகளின் காலனி ஆகும். அவை அனைத்தும் ஒரு விலங்கைப் போல ஒன்றாக வேலை செய்கின்றன.

இதன் நீளமான நீல-மஞ்சள் நிறக் குடை போன்ற உடலிலும் நீண்ட நஞ்சு நிறைந்த கூந்தல்களும் காணப்படுகின்றன.

கடல்சார் பாதுகாப்பு வல்லுநர்கள் இதனை எச்சரிக்கையாகக் கவனிக்க வேண்டியவையாகக் கூறுகின்றனர்.

ஏனெனில் இதன் நஞ்சு சிறிய மீன்கள் மற்றும் ஒட்டுண்ணி உயிரினங்களை பலவீனமாக்கும் திறன் கொண்டது.

அதன் மேல் இருக்கும் tentacles (நச்சுக் கூந்தல்கள்) மனிதர்களுக்கு ஆபத்தாக அமையக்கூடும். 

இவற்றின் விஷம் உடல் மேல் புண்கள் ஏற்படுத்தும். ஆனால் உயிருக்கு ஆபத்தானதாக இதுவரை அறியப்படவில்லை.

இவ்வாண்டு (2023 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரை) மொத்தம் 1,432 ஜெல்லிபீஷ்கள் பிரித்தானியாவில் காணப்பட்டன.

இதில் மேன் ஓ' வார்களும் அதிகமாக பதிவாகியுள்ளன.

அதிகரித்துள்ள வெப்பநிலையும் கடல்துறையின் மாற்றங்களும் இவற்றின் வருகைக்கு காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்