புதிய டிவி சேனல் தொடங்கும் விஜய்!
3 கார்த்திகை 2024 ஞாயிறு 10:53 | பார்வைகள் : 4458
தளபதி விஜய்யின் கட்சி சார்பில் ஒரு டிவி சேனல் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பெயரும் தயாராகி விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த வாரம் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் இந்த கட்சியின் மாபெரும் மாநாடு நடைபெற்றது என்பது தெரிந்தது.
இந்த மாநாட்டில் அவர் பாஜக, திமுக உள்ளிட்ட சில கட்சிகளை விமர்சனம் செய்ய, அதற்கு பதிலடிகளும் விமர்சனங்களும் கிடைத்தது என்பதும், இதனால் தமிழக அரசியலில் தேர்தல் இல்லாத இந்த நேரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய ஆலோசனை நடந்து வரும் நிலையில், கட்சிக்காக ஒரு புதிய டிவி சேனல் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சேனலில், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள், செய்திகள், விஜய்யின் சுற்றுப்பயணம் விவரங்கள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டிவி சேனலுக்கு 'தமிழ் ஒளி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த டிவி சேனல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி
RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025


























Bons Plans
Annuaire
Scan