புகைப்படக்கலையை அறிமுகப்படுத்திய பிரான்ஸ்...!! - நேற்றைய தொடர்ச்சி..!!
4 புரட்டாசி 2019 புதன் 10:30 | பார்வைகள் : 18391
புகைப்படம் எடுப்பதற்காக கேமராவின் ஷட்டரை திறக்கும் போது விரைவாக ஒளி உள்ளே சென்றால் போதும்.. விரைவாக புகைப்படம் எடுக்கலாம் என்பதை Nicéphore Niépce உணர்ந்தார்.
அதுவரை Camera obscura எனும் தொழில்நுட்பமே இருந்தது. அதாவது கேமராவுக்குள் மிக இருட்டாக இருந்தால், வெளியே உள்ள வெளிச்சம் விரைவாக பதிவாகும் என்பது.
(கேமராவை பெரும் துணி கொண்டு மூடி புகைப்படம் எடுப்பதை பழைய சினிமாக்களில் கண்டிருபீர்கள்...)
Louis Daguerre எனும் தனது நண்பருடன் இணைந்து விரைவாக ஒளி உள்ளே செல்லக்கூடிய லென்ஸ் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் Nicéphore Niépce.
அதில் வெற்றியும் பெற்றார்.
1833 ஆம் ஆண்டு பரிசின் வீதியை புகைப்படம் எடுத்தார். வெறும் ஒரு நிமிடத்தில் வேலை முடிந்தது.
உலகம் கேமராவின் தேவையை அப்போதுதான் உணர்ந்திருந்தது. ஆனால் 'எட்டு மணிநேரம் ஆகுமே?' என அங்கலாய்த்தவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
ஓகஸ்ட் 19 ஆம் திகதி, 1839 ஆம் வருடம் இந்த தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடு, அனைவரும் பயன்படுத்த அனுமதியும் வழங்கினார்.
'புகைப்படக்கலை' கன்னாபின்னாவென வளர்ந்தது. இயற்கை, மரம், செடி கொடி, ஆடு மாடு புல் பூண்டு என கிடைக்கும் அத்தனையையும் புகைப்படமாக சுட்டுத்தள்ளினார்கள்.
ஆனால் விதை யார் போட்டது..?? Nicéphore Niépce எனும் பிரெஞ்சு மனிதர்.