இரண்டு தீயணைப்புபடை வீரர்கள் பலி!
3 கார்த்திகை 2024 ஞாயிறு 15:43 | பார்வைகள் : 8763
21 வயதுடைய இரு இளம் தீயணைப்புபடை வீரர்கள் வீதி விபத்தொன்றில் பலியாகியுள்ளனர்.
Vendôme (Loir-et-Cher) நகருக்கு அருகே இந்த விபத்து நேற்று நவம்பர் 2 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. SDIS41 படைப்பிரிவைச் சேர்ந்த இரு தீயணைப்பு வீரர்கள் கடமையில் இல்லாத நேரத்தில் வீதியில் பயணித்த நிலையில், இருவரும் விபத்துக்குள்ளாகி பலியாகியுள்ளனர்.
காலை 10 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ”எங்களது இரு வீரர்களை நாம் இழந்துள்ளோம். அவர்கள் என்றும் எங்களது நினைவில் வாழுவார்கள்!” என அந்நகரின் தீயணைப்பு படையினரின் தலைமச் செயலதிகாரி தெரிவித்தார்.
உயிரிழந்த இரு வீரர்களுக்கும் தனது அஞ்சலியை உள்துறை அமைச்சர் Bruno Retailleau தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan