Samuel Paty கொலை வழக்கு : எட்டுப் பேருக்கு இன்று தீர்ப்பு!!
4 கார்த்திகை 2024 திங்கள் 07:51 | பார்வைகள் : 1851
பேராசிரியர் Samuel Paty படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இன்று நவம்பர் 4 ஆம் திகதி எட்டுப் பேருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.
25 தொடக்கம் 65 வயது வரையுள்ள ஏழு ஆண்கள் ஒரு பெண் என மொத்தமாக எட்டுப்பேருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட உள்ளது. இந்த கொலை வழக்குக்காக சிறப்பு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்தன.
Conflans-Sainte-Honorine (Yvelines) நகரில் வைத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று புவியியல் பேராசிரியர் Samuel Paty கொலை செய்யப்பட்டிருந்தார். 2010 ஆம் ஆண்டு பிரான்சுக்கு வருகை தந்த Azim Epsirkhanov எனும் 23 வயதுடைய பயங்கரவாதி ஒருவனே இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் மேலும் சிலர் என மொத்தம் 8 பேருக்கு இன்று தண்டனை வழங்கப்பட உள்ளது.