புகைப்படக்கலையை அறிமுகப்படுத்திய பிரான்ஸ்...!!
2 புரட்டாசி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 18245
<<போட்டோகிராஃபி>> என்பது தற்போது ஒரு மந்திரச்சொல் ஆகிவிட்டது. கைகளில் உள்ள தொலைபேசிகளின் மூலம் கூட அட்டகாசமான போட்டோக்கள் எடுத்து அசத்துகின்றார்கள்... ஆனால் அதன் வரலாறு எங்கு ஆரம்பித்தது..??
புகைப்படக்கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது Nicéphore Niépce எனும் ஒரு பிரெஞ்சு மனிதர்.
1822 ஆம் ஆண்டு முதன் முதலான தனது கேமராவின் வழி பரிசின் வீதியை புகைப்படம் எடுத்தார்.
'போர்ட்ரைட்' என அழைக்கப்படும் மனித உருவங்களைத்தான் அதுவரை படம் பிடித்து வந்தார்கள். (அதுவரை என்றால் மிக நீண்ட வருடங்கள்.. கிட்டத்தட்ட 1685 ஆம் ஆண்டு கேமரா கண்டுபிடித்ததன் பிற்பாடு...)
இவர், இந்த புகைப்படக்கலை எனும் வார்த்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடு, கேமரா தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஒன்றை நிகழ்த்தினார்.
அப்போதுவரை புகைப்படம் எடுக்கவேண்டும் என்றால்.. ஷட்டர் ஸ்பீட் அநியாயத்துக்கு நீளமாக இருக்கும். கிட்டத்தட்ட எட்டு மணி நேரங்கள்.
கேமராவை ஆடாமல் அசையாமல் ஓரிடத்தில் வைத்துக்கொண்டு ஒரு புகைப்படம் எடுப்பது என்பது பெரும் சவால்.
அதிலும் வீதிகள்... சவாலோ சவால்..
வீதிகளில் செல்லும் வாகனங்கள்... வானில் தோன்றும் மேகங்கள்... இப்படி 'அசையக்கூடிய'வற்றை புகைப்படம் எடுப்பது எப்படி சாத்தியம்..??
அவரே இதற்கு ஒரு தீர்வும் கொண்டுவந்தார்...!!
-நாளை