Paristamil Navigation Paristamil advert login

சவூதி அரேபியாவில் கண்டுபிடிப்பிடிக்கப்பட்ட 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம்

சவூதி அரேபியாவில் கண்டுபிடிப்பிடிக்கப்பட்ட 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம்

4 கார்த்திகை 2024 திங்கள் 10:56 | பார்வைகள் : 332


சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வடமேற்கு சவூதி அரேபியாவில் பழமையான கோட்டை நகரத்தின் எச்சங்கள் , பிரான்ஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அல்-நதாஹ் என்று அழைக்கப்படும் குறித்த இடம், வறண்ட பாலைவனத்தால் சூழப்பட்ட பசுமையான பகுதியில் நீண்ட காலமாக மறைந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள்,

"இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கி. மு 2400க்கு முந்தையது. 

இந்நகரத்தில் 500 பேர் வரை வாழ்ந்திருக்கலாம். இந்த முக்கியமான கண்டுபிடிப்பு பண்டைய மக்கள் நாடோடிகளிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு எவ்வாறு மாறியது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இது பிராந்தியத்தின் வரலாற்று நிலப்பரப்பில் அதன் முக்கியத்துவத்தை வெளிகாட்டுகிறது.

அக்கால சமூக மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சிகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அரேபிய தீபகற்பத்தின் இந்த பகுதியில் நகரமயமாக்கலை நோக்கிய முக்கிய மாற்றத்தை வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்