லியோன் நகரில் ஒரு நோர்து-டேம்..!!
1 புரட்டாசி 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18758
நோர்து-டேம் என்றதும் பரிசில் உள்ள தேவாலயமும் அதன் தீ விபத்தும் ஞாபகத்துக்கு வந்திருக்கும். லியோன் நகரில் ஒரு நோர்து-டேம் தேவாலயம் உள்ளது உங்களுக்கு தெரியுமா? இன்றை பிரெஞ்சு புதினத்தில் அது குறித்து சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
*Basilique Notre-Dame de Fourvière என பிரெஞ்சில் அழைக்கப்படும் இத்தேவாலயம் லியோன் நகரின் மிக முக்கியமான அடையாளமாக கருதப்படுகின்றது.
*இந்த தேவாலயம் முழுக்க முழுக்க தனியாரின் நிதி உதவியால் கட்டப்பட்டது.
*1872 ஆம் ஆண்டில் இருந்து 1884 ஆம் ஆண்டுவரை இதன் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றது. மொத்தமாக 12 வருடங்கள் எடுத்துக்கொண்டது.
*கன்னி மேரியின் சிறப்பு நாளான (கிருஸ்தவ இறையியல்) Immaculate Conception நிகழ்வுக்காக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 8 ஆம் திகதி சிறப்பு வழிபாடுகள் இங்கு இடம்பெறும். அன்றைய நாளில் தேவாலயம் முழுவதும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மிக அழகாக தோற்றமளிக்கும்.
*Franco-Prussian யுத்தத்தின் போது பிரான்ஸின் பல நகரங்கள் ஜெர்மனி வீரர்களால் கைப்பற்றப்பட்டது. இதன்போது இத்தேவாலயத்தை ஜெர்மனிய படையினர் ஆக்கிரமித்திருந்தனர்.
*1982 ஆம் ஆண்டில் இத்தேவாலத்தில் ஆண்டனா ஒன்று அமைக்கப்பட்டது. அன்றில் இருந்து Radio Fourvière எனும் வானொலி ஒன்று இயங்கி வருகின்றது. கிருஸ்தவ வானொலியான இதில் கிஸ்தவ பாடல்களோடு, சிறப்பு பூஜை நிகழ்வுகளையும் நேரடியாக கேட்கலாம்.
*லியோன் நகரின் முக்கியமான அடையாளமாக மாறியுள்ள இந்த தேவாலயம் வருடத்துக்கு 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை சந்திக்கின்றது.