Paristamil Navigation Paristamil advert login

கத்தரிக்காய் ரசம்...

கத்தரிக்காய் ரசம்...

4 கார்த்திகை 2024 திங்கள் 10:47 | பார்வைகள் : 478


விதம் விதமாக  ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீர்க்ள் இப்போது வித்தியாசமன சுவையில் கத்தரிக்காய் ரசம் செய்து பாருங்கள். இந்த கத்தரிக்காய் ரசம்  சாதத்துடன் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய்– 1/4 கிலோ

எண்ணெய்- 2 ஸ்பூன்

கடுகு- 1 ஸ்பூன்

பட்ட மிளகாய்- 2

சீரகம்- 1 ஸ்பூன்

பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை- தேவையான அளவு

புளி கரைசல்- 1/2 கப்

வெங்காயம்- 1

பச்சை மிளகாய்- 2

வெல்லம்- 2 ஸ்பூன்

கொத்தமல்லி இலை- சிறிதளவு

செய்முறை:

* முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பை ஆன் செய்து குறைவான தீயில் வைத்து கத்தரிக்காவை சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.

* பிறகு, சுட்ட கத்தரிக்காவின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும் காம்பினையும் நீக்கி விட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

* இப்போது, ஒரு கரண்டியினை பயன்படுத்தி கத்தரிக்காவை மசித்து கொள்ளுங்கள்.

* நன்றாக மசித்த பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பிறகு, இதனுடன் நச்சு எடுத்த வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

* இந்நிலையில், கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீரும் சேர்த்து கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்.

* இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பிறகு இரண்டாக நறுக்கிய பட்ட மிளகாய், பெருங்காய தூள் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

* இப்போது வதக்கிய பொருட்களை எடுத்து தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்