நோர்து-டேம் தேவாலயத்தில் உள்ள வேதாளங்கள்...!!
29 ஆவணி 2019 வியாழன் 10:29 | பார்வைகள் : 18316
850 ஆண்டுகள் பழமையான நோர்து-டேம் தேவாலயம் இவ்வருடத்தில் பெரும் பேசுபொருள் ஆனது. இவ்வருடத்தில் இடம்பெற்ற மறக்கமுடியாத தீ விபத்தே இதற்கு காரணம்.
நோர்து-டேம் தேவாலயத்தில் உள்ள வேதாளங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அவை பார்ப்பதற்கு அரக்கத்தனமாகவும், மிக கோரமான முகத்தினையும் கொண்டுள்ளது.
<<கார்கோய்லெஸ்>> (Gargoyles) என்பது அதன் பெயர். இது ஒரு சிலை. உருவத்தினை மிகச்சரியாக விபரிக்கமுடியாத சிலை. நோர்து-டேம் தேவாலயத்தினை சுற்றி நான்கு பக்கமும் பல்வேறு கார்கோய்லெஸ்கள் உள்ளன.
இவை 1163 ஆம் ஆண்டில் இருந்து தேவாலயத்தில் உள்ளன.
இதற்கு பின்னால் பெரும் கதையும் வரலாறும் உண்டு.
Gargoyle எனும் வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து உருவானது. 'உயிர்ப்புள்ள வேதாளம்' என அர்த்தம் கொள்ளலாம்.
சிங்கத்தின் தலையையும், உடலமைப்பையும் கொண்டுள்ள இது கிரேக்கத்தில் தோற்றம் பெற்றது. இவை தேவாலத்தின் கட்டிட்டங்களை பாதுகாப்பதாகவும், துஷ்ட்ட சக்திகளுக்கு திராக போரிடுவதாகவும் பல கட்டுக்கதைகள் உண்டு.
நோர்து-டேம் தேவாலயத்தில் மொதமாக 102 கார்கோய்லெஸ் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவை அனைத்தும் இப்போது இல்லை. பல கார்கோய்லெஸ்கள் உடைந்து விழுந்தும், சேதமாகியும் உள்ளன.
தற்போது தேவாலயத்தை ஒட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது வெறுமனே 39 கார்கோய்லெஸ்கள் தான்.
இவை கைமோரா போன்றும் குரோக்டக்ஸ்ட் விலங்குகள் போலவும், கார்குய்ல் போலவும் தோற்றமளிக்கின்றது. தவிர இவை அரை மனிதன் மற்றும் ட்ராகன் வடிவிலும் உள்ளது.